Description
கஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களிலேயே அதிகபட்ச ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நல்லாட்சி புரிந்தவன் ‘பல்லவ மன்னன்’ என அழைக்கப்பட்ட இரண்டாம் நந்திவர்மன். அரசுக்கட்டிலுக்கு போட்டியாக சித்ரமாயன் இருக்கிறான்.
வரலாற்றில் சித்ரமாயனைக் குறிப்பிடும் பொழுது பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனின் புதல்வன் ஒரு சிறுவன் என பதிவிட்டுள்ளார். ஒரு சிறுவனை அரசுக் கட்டிலில் ஏற்க மறுத்து மற்றோர் சிறுவனை ஏன் காம்போஜ நாட்டிலிருந்து தருவிக்க பல்லவ அரசு பிரதானிகள் முயற்சிக்க வேண்டும் ? ஏனிந்த முரண்பாடு ? இதற்கான காரணம் வரலாற்றில் தெளிவாக இல்லை! அவைகளுக்கெல்லாம் இக்கதையில் நியாயம் சேர்க்க முற்பட்டிருக்கிறேன்.
நந்திவர்மனது வாழ்வில் நடந்தேறிய பல நிகழ்வுகளை மையமாகக் கொண்டு கற்பனை முலாம் பூசி இந்த வரலாற்றுப் புதினம் படைக்கப்பட்டிருக்கிறது.