Description

மனிதவாழ்க்கை ஒரு விசித்திரமான போர்க்களம். இந்தக் கடுமையான போர்க்களத்தில் மனிதன் சமுதாயத்தோடும், தன்னிடம் அன்பு செலுத்துகின்ற உறவினர்களோடும், தன்னோடும் போராட வேண்டியிருக்கிறது. இவ்வகையில் தன பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர். மேலைச்சிதறல் கோமகன். சிவப்பு சிந்தனையுடைய இவர் தன புரட்சிகரமான கருத்துகளைத் தனது ஓரங்க நாடகங்களில் பதிவு செய்துள்ளார்.