Description

வரலாற்று நாவல்

ஆறிரு மேடும் மடுவும் போலாம் செல்வம் என்பர் . வல்லரசுகளின் வாழ்வும் அத்தன்மையதுதான். இதற்கு உலக வரலாறு எவ்வளவோ சான்று பகரும்.

கால  வேகத்திலே தோன்றி வளர்ந்த சாம்ராஜ்யங்கள் மக்களின் வாழ்விலும் நாட்டின் பண்பாட்டிலும் தங்கள் முத்திரைகளைப் பாதிக்கின்றன.

தமிழகத்தில் முப்பெரும் வல்லரசுகள் வாழ்ந்து. ஆட்சி புரிந்து நாட்டை வளப்படுத்தின. உலகத்தின் இதர பல நாடுகளிலும் தங்கள் புகழ் ஒளி பரப்பின. பின் காலச் சூறையிலே சிக்கிச் சிதைந்தும் போயின. எனினும் அவற்றின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பற்றித் திட்டவட்டமாகக் கூறும் வரலாறுகள் இல்லைதான்.

வரலாற்றின் படி கிடைத்துள்ள பாண்டி நாட்டில் கி.பி 3 ம்  நூற்றாண்டின் ஆரம்பம் முதல் கி.பி 6 ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை களப்பிரர் என்போரின் ஆதிக்கம் நிலவி நின்றது.

நாட்டிலேயே இருள் பரப்பிய ஆட்சியினரை வென்று ஒழித்து மீண்டும் நல்லாட்சி நிறுவியவன் பாண்டியன் கடுங்கோன் (கி.பி 575 – 600). அம்மன்னனின் லட்சிய தாகமும், முயற்சிகளும், அவனது வீரமும், போராட்டமும், வெற்றியும் புகழுதற்குரியன காலத்திரையின் பின்னே மூடுண்டு கிடக்கும் அவற்றை ஒருவாறு அறிமுகப் படுத்துவதற்காகவே உதயமாகிறது இந்த விடிவெள்ளி.

Additional information

Weight 0.298 kg
Author