Description
விஷ்ணு பல்லவன் (வரலாற்று நாவல்)
சிறப்பான சிற்பக்களையைப் பிற்கால பல்லவரின் முதல்வனான சிம்மவிஷ்ணு தொடங்கி வைத்தான்.
அவனுக்கு விஷ்ணு பல்லவன் என்ற பெயரை வரலாறு சூட்டவில்லை. நான் சூட்டியிருக்கிறேன். பல்லவப் பெருமக்கள் வடமொழிக்குப் பல உதவிகள் புரிந்துள்ளார்கள். இவர்கள் காலத்தில்தான் யானை முதுகு அல்லது ‘தூங்கானை மாடம்’ என்ற விமானம் தோன்றியது. மேலும், கல்வெட்டுச் சாசனங்களுக்கும் பல்லவர் முதன்மை தந்தார்கள்.
களப்பிரர்களை முதன்முதலாக காஞ்சியிலிருந்து விரட்டி அதைக் கைப்பற்றியவன் விஷ்ணு பல்லவன். இவனைத் தொடர்ந்து அக்களப்பிரர்களைத் தங்கள் நாட்டிலிருந்து பாண்டியர்களும் சேரர்களும் விரட்டினர்.
முதலாவதாக அவர்களை விரட்டிய இப் பல்லவ மன்னனே கடைசியாகவும் சோழ நாட்டிலிருந்து விரட்டினான். அது முதற்கொண்டு சுமார் முந்நூறு ஆண்டுகள் சோழ நாடு பல்லவர் ஆட்சியில் இருந்தது. இந்தப் பகுதியின் சிறப்பபைத்தான் இந்த நாவல் கூறுகிறது.