Description
வேள்வித் தூண் (வரலாற்று நாவல்)
தொண்டைமான் இளந்திரையன் என்ற பெயர் சிறுவர்களும் அறிந்த ஒன்று. அப்பண்டைய மன்னனைப் பற்றி நவீனம் எழுத ஆராய்ந்த போதுதான் பற்பல விவரங்களை அறிய நேர்ந்தது.
ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒரு வெண்பா தரப்பட்டிருக்கிறது. அது அத்தியாயத்தின் திரண்ட கருத்தையோ அல்லது சிறந்த பகுதியையோ தாங்கியிருக்கும்.
‘வேள்வித் தூண்’ என்னும் இச்சரித்திர நாவல் வெறும் கதையாக மட்டும் அல்லாமல் ஆராய்ச்சியைத் தூண்டும் நூலாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
இளந்திரையன் கதைத் தலைவன் என்பதைவிட ஆசிரியர் கருத்துப்படி கரிகாற் சோழனின் பேரனான இளந்திரையன் பற்றிய கதைப் புனைவாக உள்ளது. போர்களக் காட்சிகள் நேரில் காண்பதைப் போல நெஞ்சைத் திகிலூட்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
ஒவ்வோர் அத்தியாயத்தின் திரண்ட கருத்தையும் வெளிப்படுத்தும் வெண்பாவின் கீழ் காட்சி விருந்து படைக்கப்பட்டிருப்பது ஒரு புதுமைச் சிந்தனை வார்ப்பு.