Description
இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களைப் பற்றி அறியும்போது மதவாதியா? தீவிரவாதியா? என்றதொரு வகைப்பாடு தேவைப்படுகிறது. மதவாதிகளைத் ‘தியாகிகள்’ என்றும் தீவிரவாதிகளை ‘வீரர்கள்’ என்றும் குறிப்புணர்த்திக் கொள்கிறோம். சுதந்திரப் போராட்டக்காரர்களுள் சிலரை மட்டும் அந்த இரண்டு வகைக்குள்ளும் வகைப்படுத்த முடியாது. அவர்களுள் ஒருவர் வ.உ.சி. – பிரிட்டிஷ்காரர்களை விரட்டியடிக்க வ.உ.சி. தேர்ந்தெடுத்தபாதை மதவாதம் என்ற பனிப்பாதையும் அல்ல, தீவிரவாதம் என்ற இரத்தப் பாதையும் அல்ல. இரண்டுக்கும் இணையாகச் செல்லும் ஒரு புதுப்பாதை. அது பணப்பாதை. ஆனாலும் அது மதவாதப் போக்குதான். வ.உசி. மதவாதிதான். பெருமளவிலான பணமுதலீட்டில் பிரிட்டிஷாருக்குப் போட்டியாக வணிகம்செய்து, வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்த அவர்களை வணிகத்தாலே விரட்டியடிக்க பணக்காரரான வ.உ.சி. திட்டமிட்டார். தன்னுடைய பெருஞ்சொத்துக்களை விற்றுப் பல வகையில் செயல் பட்டார். பிரிட்டிஷாரைப் பணத்தால் அடித்த வ.உ.சி. ஒரு மதவாதிதான்.
Reviews
There are no reviews yet.