Description
தொல்காப்பியம் நூல் அல்ல சிந்தனைப் பள்ளி என்ற நூலாசிரியரின் முதல் துவக்கமே. அவரின் இலக்கண மதிநுட்பத்திற்கு மொழியியல் அறிவிற்கு நனிசான்றாகும். தொன்மை தமிழின் சிறப்பை எடுத்துரைத்து சிங்கள இலக்கண உருவாக்கத்தை விவரித்து, வீரசோழியத்தின் புதிய மரபுகளை நேமிநாதத்தின் எழுத்ததிகார கூறுகளுடன் ஒப்பீட்டு, வீரமாமுனிவரின் கொடுந்தமிழ் இலக்கணத்தில் புணரியல் கூறுகளை ஆராய்ந்து, திராவிட மொழிகளில் தனித்தியங்கும் தமிழ் ஒலியியல் கூறுகளை கால்டுவெல் வழி நின்று ஆய்ந்துரைத்து, பாணீனிய அஷ்டாத்யாயின் காரசுக் கொள்கைகளை வீரசோழிய காரகக் கொள்கையுடன் ஒப்பிட்டு சான்றுடன் விளக்கி, அருகி வரும் இலக்கண உணர்வை மாணவர்கள் மொழியியல், நோக்கில் சிந்திக்க வித்திட்டுள்ள முனைவர் மு.ஜோதிலட்சுமி அவர்களுக்கு எனது அகம் மகிழ் ஆசிர்வாதத்தையும், வாழ்த்துக்களையும் நல்குகிறேன்.
Reviews
There are no reviews yet.