PON VIKRAM பொன் விக்ரம்

PON VIKRAM பொன் விக்ரம்

கதை என்பது கற்பனை மட்டுமே அப்படி இருக்கலாமா? இருக்கலாம் ஆனால் அது வாசிப்பவரை நெருங்காது. உண்மை மட்டுமே என்றால்? அது
நாவலென்ற வடிவத்துக்குள் வராது. கற்பனை உண்மையோடு கலக்கக்கூடாது
ஆனால் அது நட்சத்திரம் போல ஆங்காங்கே மின்னலாம். பெரும் பெரும் நாவலாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் கச்சேரி மாயக்கா மட்டுமே குறுநாவல். நான் எப்போதும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அதுதான் என்னால் முடியாததாக இருக்கும் முயன்று பார்த்திருக்கிறேன்.
“கச்சேரி மாயக்கா” சின்னச் சின்ன மின்மினியாக எனக்குள் சிறகடித்தவள்,
எனக்குள் பிரவேசித்தவளை பிரசவத்திருக்கிறேன் நட்சத்திரமாக,
அவள் வானத்தில் மின்ன வாழ்த்தி வழிகாட்டுவீர்கள் என நம்புகிறேன்.
எத்தனையோ நாள் நாலு சுவற்றுக்குள் அமர்ந்து எழுதியெழிதி வாசித்துக்
கொண்டே இருக்கிறேன். எத்தனையோ வழிகள் தெரிந்தாலும் எந்த வழியில் போவதென்று சில நேரம் யோசனையாகத் தான் இருக்கிறது.
எவ்வளவுதான் ஒரு பெண் பார்த்துப் பார்த்து பல மணி நேரம்
அலங்காரம் செய்து கொண்டாலும் யாராவது ஒருவர் அழகாய் இருக்கிறாய்
என்று சொன்னால் தானே. அவளுக்கு அவள் அழகு மீது நம்பிக்கை வருகிறது.
அப்படி மாயக்காளை வாசித்து வாழ்த்திய நேசத்துக்குரிய நண்பர்கள் முனைவர் ச.முருகேசன், இனிய கவிஞர் வண்டியூர் செ.தமிழ் ராஜ், ஓவியக்கவிஞர் வெண்புறா, சிறந்த வாசிப்பாளர் பறவை கணேசன், தம்பி முத்தழகேசன், கதை சொல்லி. பசுமலை பாரதி, கவிஞர் ஸ்ரீதர்பாரதி. ஆகியோருக்கும், வாசித்ததோடல்லாமல் நாவல் செம்மையுற
வழிகாட்டிய கவிஞரும் பத்திரிக்கையாருமான பா.கவிதாகுமார், மற்றும் அகிலா விக்ரம், அவர்களுக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
மதுரை மாவட்ட வாசிப்பு இயக்கத் தோழர்களுக்கும், அணிந்துரை நல்கிய அன்புக்குறிய தோழர்கள் மேனாள் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் கவிஞர் மு.செல்லா அவர்களுக்கும் எனது அன்பையும் மகிழ்வான நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இரண்டு நாவல்களை, ஒரு புள்ளியைக் கூட மாற்றாமல்
செம்மையாக வெளியிட்டு எம்மைப் பெருமைப்படுத்திய கௌரா பதிப்பக குழுமத்தின் MJ publication House பதிப்பகத்தின் உரிமையாளரும், அய்யா, அண்ணா என அன்போடு அழைப்பதிலும், எங்கள் பதிப்பக எழுத்தாளரென எங்கும் எப்போதும் உரிமையோடு அறிமுகம் செய்வதிலும், பதிப்பு உலகில் வானம் ஒரு எல்லையில்லை என அதையும் தாண்டும் ஆற்றலோடு வலம் வரும் கௌரா ஜெய்கணேஷ் அவர்களுக்கும் இந்நாவலுக்கான முன் அட்டைப் படத் தேர்வு என அனைத்திலும் உதவிகரமாய்
ஆலம் தாங்கிய விழுதாய் என் தோளுக்கு மேல் வளர்ந்து தோழனான பொறியாளர் முகிலன் அவர்களுக்கும் எனது அன்பும் நன்றியும் என்றும் உரித்தாகுக.
பிற படைப்புகள் :
உள்ளத்திலிருந்து (ஏப்ரல் 2009),
தொடு வானத்தை (ஏப்ரல் 2010),
துளித்துளியாய் சொட்டுச் சொட்டாய் (மே 2014),
அவசர அவசரமாய் (மே 2014),
இடைவெளி (மே 2014),
சேணம் கட்டிய குதிரைகள் (நாவல் 2017),
நெகிழும் தருணங்கள் (கவிதை 2018),
சித்திரத்தில் பெண்ணெழுதி (கவிதை 2020),
தூரிகை தூவிய வண்ணங்கள் (நாவல் 2020)
பிரியங்களுடன்
பொன். விக்ரம்

Books By PON VIKRAM பொன் விக்ரம்