Description
1926-1950 காலகட்டத்தில் ஏற்பட்ட சமுதாய விழிப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட தனித்தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் ஆகியவற்றின் விளைவாகத் திருக்குறளுக்குப் பல புதிய உரைகள் தோன்றின. அவற்றுள் பல உரைகள் பேரளவு பரிமேலழகரின் உரையைத் தழுவியனவாக உள்ளன. ஒரு சில குறட்பாக்களுக்குப் புதிய விளக்கங்களும் தரப்பட்டன. இவ்வகையில் வெளியான உரைநூல்கள் 17. அவற்றுள் 1926ம் ஆண்டு கா.சு.பிள்ளை உரை மிகவும் எளிமையாக அமைந்தது.








Reviews
There are no reviews yet.