Description
பழமையும் புதுமையும் விரவ, ஒல்லும்வகை முயன்று, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைக் துணை’ என்னும்
இந்நூல். இந்நூல், பெண்மை – தாய்மை – இறைமை என்னும் முப்பொருளை முதலாகக் கொண்டது. இம் மூன்றும் முறையே நுலின், உடல் – உள்ளம் உயிராக அமைந்திருக்கின்றன. இம்மூன்று முதலினின்றுங் கிளம்பிய சுவடுகளும் கோடுகளும் நூலின் பிற உறுப்புக்களென்க.
பெண் பிறவியின் விழுமிய நோக்கம், அன்பால் ஒருவனை மணந்து, ஒழுங்குப்பட்ட இல்வாழ்க்கை என்னும் இயற்கை வாழ்வு நடத்துவதில் நிறைவேறுமென்பது நூலின் திரண்ட பொருள், இயற்கை வாழ்வினின்றும் வழுவிச் செயற்கைப் பாழில் விழுவதால் விளையுங் கேடுகள் நூற் கண் விளக்கமாக ஓதப்பட்டுள்ளன. அறன், அன்பு, அருள் முதலியவற்றிற்குப் பெண் உறையுள் என்பது நூலில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழும் ஒழுக்க மணம் நூலில் யாண்டுங் கமழ்ந்து கொண்டிருக்கும்.







Reviews
There are no reviews yet.