Description
அந்தாதி இலக்கிய வகையினுள் மிகவும் சிறப்புற்று விளங்குவது அபிராமி அந்தாதி. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி இந்த அந்தாதியின் பாட்டுடைத் தலைவி ஆவார். இந்நூலை எழுதியவர் அபிராமபட்டர். இவர் அபிராமி அன்னையின் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியவர். அம்மையின் மீது தியானத்தில் ஆழ்ந்திருந்த பட்டர், சரபோஜி மன்னரின் `அன்றைய திதி என்ன’ என்னும் வினாவிற்கு, `பௌர்ணமி’ என விடையளித்து விடுகிறார். பின்பு, தன் தவறுணர்ந்து இதுவும் அன்னையின் செயலே அன்னையே சரி செய்வாள் என்று நினைந்து இந்நூலின் பாடல்களைப் பாடுகிறார். இந்நூலின் 79ஆம் பாடலைப் பாடும் போது அன்னை அவருக்கு அருள் புரிந்து விடுகிறார். இத்தகு சிறப்பினை உடைய நூல் அபிராமி அந்தாதி.








Reviews
There are no reviews yet.