Description
மிகத் தொன்மையுடைய மொழியான தமிழ்மொழி இன்றைய நிலையில் அறிவியல் நிலையில் வளர்ந்துவரும் காலச்சூழலை ஈடுசெய்யும் வகையில் மொழித்துறையிலும் பல மாற்றங்களும் ஏற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அந்த நிலையில் சட்டத்துறை சார்பாக, சட்டங்களைத் தமிழ்மொழியில் பாமரர்களும் புரிந்து கொள்ளும் நிலையில் மொழியைப் பயன்படுத்த கலைச்சொல் ஆக்கங்கள் தேவைப்பட்டன. புதிய சட்டக் கலைச்சொல் ஆக்கங்களை உருவாக்கும் முகத்தன் `சட்ட-நிருவாக அருஞ்சொல் திரட்டு’ என்னும் இந்த அருங்கலைச் சொல் அகராதி தோன்றியுள்ளது. சட்டம் நிருவாகம் தொடர்பான சொல்கள், சொற்றொடர்கள், மரபுச் சொல்கள் ஆகியவற்றை அழகுதமிழில் அற்புதமாக விளக்குகிறது இந்தநூல். தமிழில் சட்டங்களைப் பயிலவும், நிருவாகத்தை மேற்கொள்ள மிகவும் பயன் பாடுடையதாக உள்ளது.
டாக்டர் வீ.சந்திரன் என்பவர் சட்டம் – நிருவாக அருஞ்சொல் திரட்டு என்னும் இந்த நூலை பல்லாண்டு உழைப்பின் பயனாக
உருவாக்கியுள்ளார். ஆயிரத்துக்கும் மேலான சட்டங்களைத் தமிழாக்கம் செய்துள்ள அனுபவம் மிகுந்தவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.








Reviews
There are no reviews yet.