Description
திரிகடுகம் என்னும் இந்த நூல் தமிழில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மூலிகைகளும் உடல் நோயைப் போக்குவதைப் போல இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் மனக்கோணலைப் போக்குகின்ற மூன்று மணியான கருத்துகளை உரைக்கின்றது. திரி என்றால் மூன்று எனப்பொருள்படும். இந்நூலின் காப்புச் செய்யுள் திருமாலைப் போற்றுகிறது. காப்புச் செய்யுள் நீங்கலாக 100 செய்யுட்களைக் கொண்டுள்ளது. பொருளுரை, பொழிப்புரை, கருத்துரை என்ற உரையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நூலைப் புலவர் நல்லாதனார் என்பவர் எழுதியுள்ளார். இந்நூல் திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார் எழுதிய உரையுடன் சதாசிவப்பிள்ளை அவர்களால் 1868-69 இல் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. பின்னர் புஷ்பரத செட்டியாரால் 1887 இல் பதிப்பிக்கப்பெற்ற உரையை அடிப்படையாகக் கொண்டு காலத்துக் கேற்ற எளிமை கருதி எமது ஆசிரியர்குழு எளியவுரை வழங்கியுள்ளது. அனைத்து நிலையினர்க்கும் பயன்படும் வகையில் இந்த உரை அமைந்துள்ளது.






Reviews
There are no reviews yet.