Description
திருக்குறள் ஜமீன்தாரிணி உரை (திருக்குறள் தீபாலங்காரம்) (1928-1929) திருக்குறளுக்கு தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முக்கியமான உரை. மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மாள் எழுதியது. திருக்குறளுக்கு ஒரு பெண்மணி எழுதிய முதல் உரை என கருதப்படுகிறது.
இந்நூல் 1928-ல் எழுதப்பட்டு 1929-ல் வெளியானது. திருக்குறள் தீபாலங்காரம் என்று இந்நூலுக்கு இலட்சுமி அம்மாள் பெயர் சூட்டினார். திரு.வி.கல்யாணசுந்தரனாரின் சாது அச்சகத்தில் இது அச்சாகியது. நீண்ட இடைவெளிக்கும்பின் இதை 2006-ல் மறுபடியும் நம் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டதே இந்நூல்.







Reviews
There are no reviews yet.