Description
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறகுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
ஜி.யு. போப், நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், மேலும் அவர் மொழிபெயர்த்த நூல்கள் திருக்குறள், திருவாசகம், புறநானூறு மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை போன்றவை ஆகும். 1893 ஆம் ஆண்டில் நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் பாடல்களுடன் ஆங்கிலமும் இடம்பெற்றுள்ளது.







Reviews
There are no reviews yet.