Description
சங்ககால மக்கள் வாழ்க்கை இயற்கையுடன் அமைந்து செல்வதாக இருந்தது. அக்கால மக்களின் வாழ்க்கை செம்மாந்த
நிலையில் அறக்கருத்துகள் ஆங்காங்கே இழையோடின. சங்கம் மருவிய காலத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில்
அறக்கருத்துகளைத் தொகுத்துரைக்கும் தனிநூல்கள் தோன்றின. அவை பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டன.
எனினும் காலப்போக்கில் அறநூல்கள் மேலும் பெருகிய வண்ணமாகவே உள்ளன. அந்த வகையில் 17ஆம் நூற்றாண்டில்
தோன்றிய பல நூல்களுள் நீதிநெறி விளக்கம் என்னும் நூலும் ஒன்று. கல்வியின் பெருமையைப் பலபட எடுத்தோதும் இந்த
நூல் 102 பாடல்களைக் கொண்டுள்ளன. நூலில் இறுதிப் பகுதி தவத்தின் வழியே பெறும் வீட்டுநிலையை எடுத்துக் காட்டுகிறது. நீதிநெறி விளக்கம் என்னும் இந்த நூலைச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருவைகுண்டத்தில் தோன்றிய குமரகுருபரர் என்பவர் எழுதியுள்ளார்.







Reviews
There are no reviews yet.