Description

பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.

கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார். மார்க்சின் “மூலதனம்” நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.