Description
பள்ளு இலக்கியங்களுள் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுவது முக்கூடற்பள்ளு. முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர்மீது பாடப்பட்டது. முக்கூடல் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடமாகும். தாமிரபரணி நதியோடு சிற்றாறும் கயத்தாறும் கூடும் இடமே முக்கூடல் என வழங்கப்படுகிறது. முக்கூடற்பள்ளு திருமால் கருடாழ்வார், சேனைகள், நம்மாழ்வார் ஆகியோரைக் கடவுளர்களாகக் கொண்டு வாழ்த்தித் தொடங்குகிறது.
பள்ளியர்கள் இருவர், பள்ளன் ஆகியோர் தோன்றித் தங்கள் குலத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுதல், பள்ளியர்கள் நாட்டு வளமும் நகர் வலமும் பாடுதல், மழை பெய்யும்படி குயிலை அழைத்துக் கூவுமாறு வேண்டிக் கொள்ளுதல், பள்ளர்கள் ஒன்றுகூடிக் கிராம தேவதையை மழைவேண்டி வழிபடுதல், மழைக்குறி ஏற்படுதல், மழை பெய்து வெள்ளம் வந்து ஐந்து நிலங்களிலும் பாய்ந்து வளம் செய்தல், எனத் தொடங்கிப் பள்ளு இலக்கியங்களுக்கே உரித்தான
போக்கைக் கொண்டு விளங்குகிறது. முக்கூடற்பள்ளு திருமலைக் கொழுந்து மன்னனுடைய கொடைத்தன்மையைச் சிறப்பித்துப் பாடப்பட்டது. நூலின் காலம் சற்று ஏறக்குறைய கி.பி. 1680 எனக் கணக்கிடப்படுகிறது.
முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் அக்காலத்தில் வழக்கில் இருந்த பழமொழிகள் பலவும் பயின்று வருகின்றன. அவை அம்மக்களின் (பள்ளர்இன) மொழியிலேயே அமைந்து பேச்சு வழக்கில் அறிவுறுத்தும் போக்கினைக் கொண்டு திகழ்கின்றன.






Reviews
There are no reviews yet.