Description
உலகத்தின் மூத்த இனமும், முதல் இனமும் தமிழ் இனமே. இதனைப் போல் வரலாற்றை முறைப்படி எழுதி வைக்காத
இனங்களுள் முதல் இனமும் இதுவே. இந்த இழி நிலையைப்போக்குவதற்காகத் தமிழ் நாட்டறிஞரும் வெளிநாட்டறிஞரும் முனைப்புக் காட்டினர். ஓரளவுக்கு அந்த இழிநிலையைப் போக்கியுள்ளனர். அவர்களுள் கனகசபை அவர்களும் ஒருவர். கனகசபையவர் தமிழகத்தின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதித் தமிழறியாத ஆங்கிலம் அறிந்தவர்க்கும் தமிழும் ஆங்கிலமும் அறிந்தவர்க்கும் அளித்தார்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். அப்பா துரையாரின் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாக இல்லாமல் மூலமாகவே திகழ்வது பெருஞ்சிறப்பு.








Reviews
There are no reviews yet.